33.4 C
Colombo
Sunday, November 29, 2026

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து – 30 பேர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகச் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் 50ற்கு மேற்பட்டவர்கள் அதில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் இணைப்பு 

பேருந்து விபத்து காரணமாக 52 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles