33.4 C
Colombo
Sunday, November 29, 2026

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் மே 19!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் மே 19 ம் திகதி இடம்பெறவுள்ளநிலையில் அதன்போது பொதுவேட்பாளர் தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படும் என அக்கட்சியின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நான் இலங்கை தமிழ் அரசுக் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். ஆனால் எனது பத்திரிகை ஆசிரியர் பீடம் பொதுவேட்பாளர் விடயத்துக்கு ஆதரவாகவே செயற்பட கொள்கை வகுத்துள்ளார்கள். எனது நிலைப்பாட்டுடன் பத்திரிகை நிலைப்பாட்டை ஒப்பிடக்கூடாது.

அண்மையில் பொது வேட்பாளர் தொடர்பாக கூடிய கூட்டத்தின் மூலம் அரசியல் சார்பில்லாத ஒருவர் பொது வேட்பாளராக கண்டறியப்பட்டு நிறுத்தப்படுவார். ஆனால் இதுவரை பொதுவேட்பாளர் கண்டறியறிப்படவில்லை. பொது வேட்பாளரை தெரிவு செய்வதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை சரியாக செய்வார்கள்.

இதுவரை இலங்கை தமிழ் அரசுக் கட்சி பொது வேட்பாளர் தொடர்பாக ஆராயவில்லை.  ஆனால் இன்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு கூட்டத்திற்கான கடிதம் எனக்கு கிடைத்தது. அதன்படி இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் மே 19 ம் திகதி இடம்பெற்று பொதுவேட்பாளர் தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படும்.

இந்நிலையில் பிரதான மூன்று வேட்பாளர்களும் தற்போது தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என அச்சமடைந்துள்ளனர் – என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles