32.2 C
Colombo
Sunday, October 4, 2026

ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஒஸ்கார் வழங்கிய கௌரவம்!

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஒஸ்கார் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தேந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஒஸ்கார் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல படங்கள் போட்டியிட்டு அதில் சில படங்களே தேந்தெடுக்கப்படும். அந்த ஒஸ்காரின் யூடியூப் சனலில் ’ சீன் அட் தி அகடமி ‘ என்ற தலைப்பில் சில வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறது.

அந்த வகையில் டி.ஜே. ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து அனைவரின் மத்தியிலும் பெரிதும் வெற்றிப்பெற்ற ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சிகளை பதிவேற்றம் செய்திருக்கிறது ஒஸ்கார்.

அந்த வீடியோவில் ஜெய்பீம் திரைப்படத்தின் சில காட்சிகளையும் படத்தின் இயக்குனர் அந்த படத்தை பற்றி பேசும் சில விஷயங்களையும் ஒஸ்கார் பகிர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவிற்கு இது மிக பெரிய கௌரவம் என்று சமூக வலைத்தளங்களில் அனைவரும் பதிவிட்டு அப்படத்தை வாழ்த்தி வருகின்றனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாக பரவி வருகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles