32.2 C
Colombo
Monday, October 5, 2026

நேற்று ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக கரணவாயில் 19 குடும்பங்கள் பாதிப்பு!

கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவின் கரணவாய் பகுதியில் நேற்று ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் 12 மணி வரையான நிலவரம் தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சூரியராஜாவே இந்த விவரங்களை தெரிவித்துள்ளார்.

கரணவாய் பகுதியின் ஜே348, ஜே350 பிரிவுகளிலேயே இந்த சேத விவரங்கள் பதிவாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திடீரென பெய்த மழை காரணமாக 119.2மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி ஏற்பட்டது என்றார்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles