24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

இந்தியப் பெருங்கடலில் விழுந்த சீன ரொக்கட் – பெரியளவில் பாதிப்பில்லை .

கட்டுப்பாட்டை இழந்த சீனாவினுடைய ரொக்கட்டானது இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது.

கடந்த சில நாள்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வௌியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கட்டின் சில பாகங்கள், இன்று காலை 8.50 மணியளவில் இந்திய பெருங்கடலில் வீழ்ந்துள்ளதென, சீன ஊடகங்களை மேற்கோள் காட்டி, ரொய்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலின், மாலைத்தீவுக்கு வடக்கில் இது விழுந்துள்ளதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கடல் பரப்பில் இதுவரை சுனாமி எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 தொன் நிறையுள்ள குறித்த ரொக்கட்டானது, 30 வருடங்களுக்குப் பிறகு விண்வௌியிலிருந்து பூமியில் விழுந்த மிகப்பெரிய கழிவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles