வெளிநாட்டிலிருந்து பொதிகள் சேவை மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஐபோன் மொபைல் போன்களை திருடிய வழக்கில் முன்னணி பொதிகள் சேவையின் மூன்று மேற்பார்வையாளர்கள் உட்பட 6 சந்தேக நபர்களை பொலீசார் கைது செய்துள்ளனர்.
பொலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண கூறுகையில், கடந்த ஜனவரியில் இருந்து சுமார் 19 ஐபோன்கள் இந்த முறையில் திருடப்பட்டுள்ளன.
இதுபோன்ற 16 திருடப்பட்ட தொலைபேசிகளை கண்டி, திவுலபிட்டி மற்றும் மினுவாங்கொட ஆகிய இடங்களிலுள்ள தொலைபேசி கடைகளில் இருந்து பொலீசார் மீட்டனர்.
விசாரணையின் போது, பொதிகள் சேவை நிறுவனத்தின் ஊழியர்களாக இருந்த மற்ற மூன்று சந்தேக நபர்களும் பொதிகள் சேவை மேற்பார்வையாளர்களின் அறிவுறுத்தலின் பேரில் விமான நிலையத்தில் சீல் வைக்கப்பட்ட விமான சரக்குப் பொதிகளைத் திறந்து ஐபோன்களைத் திருடியதாக நம்பப்படுகிறது.
திருடப்பட்ட ஐபோன்களின் மதிப்பு ரூ. 3 மில்லியன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மே 10 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த ஊழல் நீர்கொழும்பு பிரதேச குற்ற புலனாய்வு பிரிவு வெளிச்சத்துக்கு வந்தது.
இதுபோன்ற மோசடிக்கு யாராவது உள்ளானால், பொலிஸில் முன் வந்து புகார் அளிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.

