24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

ஏழு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக செம்மணியில் அகழ்ந்து எடுப்பு!

செம்மணி மனித புதைகுழியில் ஏழு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக இரண்டு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 52ஆம் நாள் அகழ்வு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.
இதுவரை மொத்தமாக 554 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 547 மனித என்புக் கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது
மனித என்பு குவியல்கள் இரண்டும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது – என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles