செம்மணி மனித புதைகுழியில் எழுமாற்றாக தோண்டிய மனித புதைகுழிகளுக்குள் இதுவரை ஐந்து குழிகளுக்குள் மனித என்புகள் அவதானிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 52ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டு எழுமாற்றான குழிகள் வெட்டி மனித என்புகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில்
மேலும் 12 எழுமாற்றான குழிகளை தோண்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் அவற்றில் ஆறு குழிகள் வெள்ளிக்கிழமை தோண்டப்பட்டது.
அன்றைய தினம் ஒரு மீற்றர் நீளமும் ஒரு மீற்றர் அகலமுமான விஸ்தீரணத்தில் தோண்டப்பட்ட ஆறு குழிகளில் மூன்று குழிகளுக்குள் மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏற்கனவே பரீட்சார்த்தமாக தோண்டப்பட்ட குழி இரண்டிலிருந்து பின்னால் உள்ள மதில் வரையுமான பகுதிகளில் குறித்த குழிகள் தோண்டப்பட்டது. ஏனைய ஆறு குழிகளும் விரைவில் தோண்டப்படும்
– என்றார்.

