ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் -கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளராக அருந்தவநாதன் அனோஜன் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்
கொழும்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவினால் நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
அதேவேளை யாழ் மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளின் பிரதான அமைப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நியமன கடிதத்தையும் சஜித் பிரேமதாசா வழங்கி வைத்தார்.

