29.5 C
Colombo
Friday, August 21, 2026

யாழில் திருவிழாவால் வந்த வினை! – பலர் வைத்தியசாலையில்..

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பிரான்பற்று கிராமத்தில் உள்ள ஆலயத்தில் வியாழக்கிழமை இரவு (20) நடைபெற்ற திருவிழாவின் போது, வாணவேடிக்கையால் ஏற்பட்ட புகை மற்றும் ஒளி கூடிய மின் விளக்குகளின் பயன்பாடு காரணமாக பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை 127 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளதாக கண் வைத்திய நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், கண்களில் பாதிப்பு ஏற்பட்டவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles