28.9 C
Colombo
Friday, August 21, 2026

BREAKING எரிபொருள் விலைகள் நள்ளிரவு முதல் சடுதியாக அதிகரிப்பு!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco), இன்று (21) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஓட்டோ டீசல் விலை லிட்டருக்கு ரூ. 79 அதிகரித்து ரூ. 382 ஆகவும், சூப்பர் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 90 அதிகரித்து ரூ. 443 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 92 ஒக்டேன் பெட்ரோல் விலையும் லிட்டருக்கு ரூ. 81 அதிகரித்து ரூ. 398 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 60 அதிகரித்து ரூ. 255 ஆகவும், 95 ஆக்டேன் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 90 அதிகரித்து ரூ. 455 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:

ஓட்டோ டீசல் – ரூ. 382 (ரூ. 79 அதிகரிப்பு)

சூப்பர் டீசல் – ரூ. 443 (ரூ. 90 அதிகரிப்பு)

பெட்ரோல் 92 ஆக்டேன் – ரூ. 398 (ரூ. 81 அதிகரிப்பு)

மண்ணெண்ணெய் – ரூ. 255 (ரூ. 60 அதிகரிப்பு)

பெட்ரோல் 95 ஆக்டேன் – ரூ. 455 (ரூ. 90 அதிகரிப்பு)

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles