யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் பிரவுக்குட்பட்ட பகுதியில் உயிர் கொல்லி ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு உதயானந் தலைமையிலான பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
11 கிராம் மற்றும் 5 கிராம் அளவான ஐஸ் போதைப்பொருளுடன் 25 மற்றும் 26 வயது மதிக்கத்தக்க இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்களை தெல்லிப்பழை பொலிஸார் ஊடாக நாளையதினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

