இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் முதற் தடவையாக யாழ்ப்பாணம்- ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவன் ந. டன்ஸ்சன் 20 வயது ஆண்கள் பிரிவில் கோலூன்றிப் பாய்தலில் 4.30m உயரத்தைப் பாய்ந்து முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இந் நிலையில் நேற்றையதினம் பாடசாலையில் தங்கப்பதக்கம் வென்ற மாணவன் ந.டன்ஸ்சனும் பயிற்றுவிப்பாளர் சி. சுபாஷ்கரனும் கௌரவிக்கப்பட்டனர்.

