28.9 C
Colombo
Saturday, October 10, 2026

யாழ். போதனா வைத்தியசாலையில் அலுவலர்களுடன் முரண்பட்டவர் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அலுவலர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நபரொருவர் பொலிஸாரினால் இன்று (21) கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை பெறுவது சம்பந்தமாகவே வைத்தியசாலையின் மேற்பார்வையாளர் அலுவலகத்திற்கு சென்ற குறித்த நபர் அலுவலகர்களுடன் முரண்பட்டு அங்கிருந்த பெயர் பலகையையும் சேதப்படுத்திய நிலையில் வைத்தியசாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதன்போது குறித்த நபர் மதுபோதையில் இருந்தாக தெரிவிக்கப்படும் நிலையில் சந்தேக நபரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles