28.9 C
Colombo
Saturday, October 10, 2026

பெண்களை வீட்டுப் பணியாளர்களாக வெளிநாட்டுக்கு அனுப்புவதை நிறுத்த நடவடிக்கை!

இலங்கைப் பெண்களை பணியாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அமைப்புகளுக்கு இதனை அமைச்சர் அறிவித்தார்.

பெண்களை வீட்டுப் பணியாளர்களாக வெளிநாட்டுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டு அதிக சம்பளம் பெறும் தொழில்களுக்கு பயிற்சிகளை வழங்கி அனுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்துடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் போது பத்து வருடங்களுக்குள் வீட்டுப்பணிப்பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வதை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான பிரேரணையை தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டுமென துறைசார்ந்த சகல தரப்பினருக்கும் பணிப்புரை அமைச்சர் வழங்கினார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles