31.7 C
Colombo
Sunday, October 11, 2026

கோழி வளர்ப்பு பிரச்சினை கொலையில் முடிந்தது – சுன்னாகம் கொலையின் பின்னணி தகவல்!

யாழ்ப்பாணத்தில் , உறவினர்களான அயலவர்கள் இடையில் கோழி வளர்ப்பினால் ஏற்பட்ட தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , அயலவர்களான உறவினர்கள் இருவருக்கும் இடையில் கோழி வளர்ப்பினால் பிரச்சனைகள் நிலவி வந்துள்ளன.

இந்நிலையில் நேற்றைய தினமும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது முற்றி கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது.

அதில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் உயிரிழந்ததை அடுத்து , கொலை சந்தேகநபரான 57 வயதுடைய அயலவர் கைது செய்யப்பட்டள்ளார்.

கைது செய்யப்பட்டவரை சுன்னாக பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles