29.5 C
Colombo
Saturday, October 10, 2026

அமைச்சர் டக்ளஸை சந்தித்தார் சாந்தனின் தாயார்; ஒரு சில தினங்களுக்குள் பதில் தருவதாக வாக்குறுதி!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதரர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று(30) சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இதன்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த உறுதி மொழி வழங்கப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles