இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் வகையிலும், குறிப்பிட்ட சில சுற்றுலாப் பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும் இலங்கைப் பொலிஸாரின் உதவியைப் பெறுவது தொடர்பில் சுற்றுலா அமைச்சில் ஆராயப்பட்டது.
விசேட கலந்துரையாடலில் சுற்றுலா மற்றும் இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ, பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், அமைச்சின் உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இளைஞர் விவகார அமைச்சும் பொலிஸாரும் இணைந்து இளைஞர் சமூகத்திற்காக நடைமுறைப்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் மேலும் கவனம் செலுத்தப்பட்டது.

