25 C
Colombo
Saturday, October 10, 2026

வவுனியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

வவுனியா – வீரபுரத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பையா மருதன் என்ற 78 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டவரார்.

வவுனியா, வீரபுரம் பகுதியில் வசித்து வந்த குறித்த நபர் கால்நடைவளர்ப்பு மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் குறித்த நபரை கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போன நிலையிலே திங்கட்கிழமை (08) மாலை குறித்த நபர் விவசாய செய்கையினை மேற்கொள்ளும் காணிக்கு அருகில் உள்ள கல்குவாரி குழியில் உள்ள நீரில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனையடுத்து, சடலம் செட்டிகுளம் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டிருந்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles