யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடற்கரைப்பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஒன்று திங்கட்கிழமை (08) கரையொதுங்கியது.
குறித்த மிதவை தென்கிழக்காசிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் சமய சடங்குகளுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய சில நாட்களுக்குள் பௌத்த கொடிகளுடனான மிதவை இதே வடமராட்சி கிழக்கு பகுதியிலும் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியிலும் கரையொதுங்கியது.

