காணொளியாக பார்க்க……
https://fb.watch/psqYx8yV4j/?mibextid=RtaFA8
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 15வது ஆண்டு நினைவு தினம் திங்கட்கிழமை (08) மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து நினைவேந்தலை நடாத்தியிருந்தது.
சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து கடத்தப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், மதத்தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

