23.9 C
Colombo
Sunday, October 11, 2026

யாழ் மாவட்டத்தில் மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு!

யாழ் மாவட்டத்தில் பல மூத்த நிர்வாக அதிகாரிகள் திங்கட்கிழமை (08) முதல் இடமாற்றப்பட்டு புதிய இடங்களில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்வாக சேவை தரத்திலான உத்தியோகத்தர்களுக்கே வழங்கப்பட்டது.

தெல்லிப்பழை பிரதேச செயலாளராக கடமையாற்றிய ச.சிவஶ்ரீ  கோப்பாய் பிரதேச செயலாளராகவும்,

கோப்பாய் பிரதேச செயலாளராகப் பணியாற்றிய சுபாஜினி மதியழகன் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராகவும்,

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராக பணியாற்றிய யசோதா உதயகுமார் நல்லூர் பிரதேச செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.

நல்லூர் பிரதேச செயலாளராகப் பணியாற்றிய எழிலரசி அன்ரன் யோகநாயகம் திருகோணமலை மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளராக இடமாற்றம் பெற்றதுடன்

திருகோணமலை மாவட்ட சமுரத்திப் பணிப்பாளராகப் பணியாற்றிய சிவகங்கா சுதீஸ்னர் தெல்லிப்பழை பிரதேச செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.

பருத்தித்துறை பிரதேச செயலாளராக இருந்த ஆழ்வார்ப்பிள்ளை சிறீ ஏற்கனவே பதவி உயர்வு பெற்றுச் சென்ற நிலையில், வெற்றிடமாக இருந்த பருத்தித்துறை பிரதேச செயலாளர் பதவிக்கு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபராக பணியாற்றிய சத்தியசீலன் பொறுப்பேற்றார்.(Jaffna Gallery)

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles