23.9 C
Colombo
Sunday, October 11, 2026

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பொலிஸ் விசேட சோதனை!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் எழுதுமட்டுவாழ் பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைள் திங்கட்கிழமை (08) இடம்பெற்றது.

யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்தவின் தலைமையில் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து மோப்ப நாய்களுடன் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது பேருந்துகளிலுள்ள பயணிகள் சோதனையிடப்பட்டு போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டதுடன் பேருந்துகளில் ஸ்ரிக்கர்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் நுழையும் எழுதுமட்டுவாழ் பகுதியிலும் பேருந்துகளை வழிமறித்து விசேட சோதனைகளும் இடம்பெற்றன.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles