28.9 C
Colombo
Friday, August 21, 2026

முல்லைத்தீவில் 250 பேர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் கடந்த சில நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் உள்ளடங்கலாக 250 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்

நாடளாவிய ரீதியில் போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் விசேட நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது.

கடந்த ஆறு நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, மாங்குளம், மல்லாவி, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், வெலி ஓயா, ஐயன்கன்குளம், நட்டாங்கண்டல், கொக்குளாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 3 கிராம் ஹெரோயின், 480 கிராம் ஐஸ், ஒரு கிலோ 855 கிராம் 39 மில்லிக்கிராம் கேரள கஞ்சா, கஞ்சா செடி 5 மற்றும் 48 கிராம் வேறு வகையான போதை பொருட்கள், 443 லீற்றர் கசிப்பு, 1797 லீற்றர் கோடா உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டன.

அதேவேளை 2 பெண்களும்,111 ஆண்களுமாக 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 25 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles