25 C
Colombo
Saturday, October 10, 2026

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைகலப்பு – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கைகலப்பில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை(23) மாலை இடம்பெற்றதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

இதன்போது 30 வயதான கைதி ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles