25 C
Colombo
Saturday, October 10, 2026

தையிட்டியில் உருவானது ஒரு பாபர் மசூதி – மைத்திரியுடனான சந்திப்பில் எடுத்துரைத்த மறவன்புலவு சச்சிதானந்தன்

பாபர் மசூதிகளை இந்து பிரதேசங்களில் உருவாக்கதீர்கள். தையிட்டியில் உருவானது ஒரு பாபர் மசூதி. அதை கட்டிய பிக்குவின் ஆடையை களைய வேண்டியது உங்கள் கடமை என சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில்  எடுத்துரைத்தார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கும், யாழ் மாவட்ட இந்துமத குருமார்கள் மற்றும் இந்துமத அமைப்புகள் இடையிலான சந்திப்பொன்று இன்று (29) காலை இடம்பெற்றது.

இதன்பின்னர் சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்து ஆலயங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக மைத்திரிபால சிறிசேன அவர்கள் கேட்டறிந்துகொண்டார்.

காணொளியாக பார்க்க….https://fb.watch/ls-Xv3-Mwl/?mibextid=RUbZ1f

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles