31.7 C
Colombo
Sunday, October 11, 2026

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு

யாழ் நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த , யாழ். போதனா வைத்திய சாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( வயது 37) மற்றும் அவருடன் பயணித்த வாகனங்கள் பழுது பார்க்கும் அராலி மத்தியை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles