24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதி.

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்பலோ தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டவுள்ளதாக கூறப்படுகிறது..

நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தனது 49வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார்.

முத்தையா முரளிதரன் தற்போது ஐதராபாத் சன் ரைசஸ் அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles