27.8 C
Colombo
Friday, August 21, 2026

நாவற்சோலையில் படகுகள் எரிப்பு; மூவர் கைது!

திருகோணமலை – கும்புறுப்பிட்டி, நாவற்சோலை கடற்கரையில் 6 மீன்படி படகுகள் இனந்தெரியாத விசமிகளால், இன்று (16) அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளன.

இதன்போது நான்கு படகுகள் முற்றாக எரியூட்டப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து பொதுமக்கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles