பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமுக்கு காணி சுவீகரிப்பதற்காக முன்னெக்கப்படவிருந்த நில அளவீட்டு பணி நடவடிக்கை எதிர்ப்பு போராட்டத்தால் கைவிடப்பட்டது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமுக்கு காணி சுவீகரிப்பதற்காக, இன்று (16) அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவிருந்தன.
இந்நிலையில், அங்கு கூடிய செ.கஜேந்திரன் எம்பி, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம், சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்ரோர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
காணியை இராணுவத்திற்க்கு வழங்க பொது மக்கள் சார்பில் யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் தாம் திரும்பி செல்வதாக நில அளவை திணைக்கள அதிகாரி தெரிவித்ததற்க்கு அமைவாக எம்.கே.சிவாஜிலிங்கம் கடிதம் ஒன்றை எழுதி நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து நில அளவை திணைக்கள அதிகாரிகள் திரும்பி சென்ற நிலையில் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

