31.7 C
Colombo
Thursday, October 8, 2026

தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு தொடர்பில் ஏற்பாடு

தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிகழ்வானது நாளை(04) காலை 9.30 மணி தொடக்கம் 11 30 மணி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது சுமாத்திரா தீவில் சுனாமி இடம்பெற்றதாக குறிப்பிட்டு அதற்குரிய தகவல்கள் மாவட்டங்களுக்கு வழங்கப்படும்.

அத்துடன் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை பிரகாரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்படுவார்கள். இது ஓர் ஒத்திகை ஆகும். மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles