24.5 C
Colombo
Thursday, October 8, 2026

முல்லைத்தீவில் மக்களுக்கான குடிநீர்திட்டம் கையளிப்பு

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் மக்களுக்கான குடிநீர்திட்டம் கையளிக்கப்பட்டது.

கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நக்கீரன் தங்கவேலு ஜயாவின் எழுபது ஆண்டு அரசியல் இலக்கிய சமூக தொண்டினைப் பாராட்டி ரொறன்ரோ நகரில் எடுக்கப்பட்ட விழாவில் கிடைத்த அன்பளிப்பு பணத்தில் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பினுடாக குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீட்டு விவசாய தேவைக்கான நீர்வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles