28.4 C
Colombo
Friday, October 9, 2026

வடமாகாண ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பு நாளை இடம்பெறாது

வடமாகாண ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பு நாளைய தினம் புதன்கிழமை (26) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெறாது என ஆளுநர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு புதன்கிழமையும் ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பு இடம்பெறுவது வழமை.

இந்நிலையில் வடமாகாண ஆளுநர் நாளைய தினம்(26) பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வவுனியா மாவட்ட அபிவிருத்தி கூடடத்தில் கலந்துகொள்வதற்காக வவுனியா செல்லவுள்ளார்.

எனவே பொதுமக்கள் நாளைய தினம் யாழ்ப்பாணததில் உள்ள ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை சந்திக்க முடியாது என்று ஆளுனரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் இருக்கமாட்டார் என்ற காரணத்தால் மக்கள் வீண் அலைச்சல் அடையக்கூடாது என்ற நோக்கில் அறிவிப்பு விடப்படுவதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles