27.8 C
Colombo
Friday, August 21, 2026

யாழில் 84 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை – பிரதான சந்தேக நபர் விமான நிலையத்தில் கைது!

யாழ்ப்பாணத்தில் கடத்தல் மற்றும் பெருந்தொகை பணத்தைக் கொள்ளையடித்த  சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

பெப்ரவரி 8 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆரியகுளத்தில் ஒரு நபர் கடத்தப்பட்டு, 84 இலட்சம் வரையான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு ஆண் சந்தேக நபர்களும் இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடத்தல் மற்றும் கொள்ளையைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், துபாய்க்கு விமானத்தில் ஏற முயன்றபோது, இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

27 வயதான குறித்த பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles