இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று நியமிக்கப்பட்டார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுவரை அப் பதவியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ப.சத்தியலிங்கம் சுகவீனம் காரணமாக பதவியில் தான் தொடர்ந்து இருக்க முடியாது என இன்றைய கூட்டத்தில் அறிவித்தமையை அடுத்து கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சத்தியலிங்கத்துக்கு அடுத்துக் கட்சியில் சிரஷ்ட துணைச் செயலாளராக இருந்த சுமந்திரனைப் பதில் பொதுச் செயலாளராக நியமிப்பது என மத்திய குழு இன்று உடனடியாகவே தீர்மானித்தது.
அந்த முடிவுக்கு கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், பாராளுமன்ற உறுப்பினர் சிறீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோர் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். எனினும், அவர்களின் எதிர்ப்பை மீறி அந்த நியமனத்தை மத்திய குழு மேற்கொண்டது.

