28.9 C
Colombo
Friday, August 21, 2026

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் இன்று இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles