28.9 C
Colombo
Friday, August 21, 2026

மதுபானசாலை விவகார குற்றச்சாட்டு ஆதாரமற்றது – அங்கஜன் எம்பி

மதுபானசாலை அனுமதியை நான் பெற்றதாக கூறிய சுதந்திர கட்சியின் செயலாளர் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இவ்வாறான கதைகளுக்கு பதில் சொல்லப்போனால் அவர்களது நிலைக்கு நாம் தரமிறங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விசனம் வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இளையோருடனான கேள்வி பதில் நிகழ்ச்சியொன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,மதுபான சாலை விவகாரம் தொடர்பாக இம்முறை தேர்தலில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆதாரங்களற்ற விவாதங்களாகவே அவை காணப்படுகின்றன.

தேர்தல் பிரசாரங்களில் ஒருவரை ஒருவர் சேறுபூசும் தன்மை காணப்படுகின்றது.

எனது சுதந்திரக் கட்சியின் செயலாளர் தனிப்பட்ட நோக்கங்களுக்காக, நான் எனது மக்களுக்காக ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டேன் என்ற அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் இருக்கும் அரசியல் மேடையில் இதனை தெரிவித்தார்.

நானே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரே பாராளுமன்ற உறுப்பினர். நான் போகும் இடமே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செல்லும் இடமாக பார்க்கப்படும்.

அவருடைய தேவை என்னை ஒரிடத்தில் சேர்க்கவேண்டும் என்று இருந்தார். சேராத இடத்தில் இவ்வாறு கதைகள் வருகிறது. ஆனால் அதற்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இவ்வாறான கதைகளுக்கு பதில் சொல்லப்போனால் அவர்களது நிலைக்கு நாம் தரமிறங்கவேண்டும்.-என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles