தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பவர்கள் இரண்டாம் விருப்பு வாக்கை சஜித் பிரேமதாசாவுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண அமைப்பாளர் உமாச் சந்திரா பிரகாஷ் கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இளையோருடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , பொது வேட்பாளர் என்பது எமது இனத்தின் அடையாளம்.தமிழ் பொது வேட்பாளரை தெரிவு செய்வதற்கான மக்களின் உரிமைகளை நான் மதிக்கிறேன். குறித்த விடயத்தின் மூலம் சர்வதேச ரீதியில் தமது விருப்பை காட்டமுடியும் என்று நம்பப்படுகிறது.
அதேவேளை தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பவர்கள் இரண்டாம் விருப்பு வாக்கை சஜித் பிரேமதாசாவுக்கு வழங்கி நாட்டில் சிறந்த ஜனாதிபதியை உருவாக்க பங்களிக்க வேண்டும் – என்றார்.

