யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது.
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடன் படகொன்று மீன்பிடியில் ஈடுபட்டது.
இதன்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை படகு, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்த போது இந்திய மீனவர்களின் படகு கவிழ்ந்து குறித்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஒருவரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் நான்கு மீனவர்கள் கடலில் விழுந்து மூவர் மீட்கப்பட்டு புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மற்றைய மீனவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய மீனவர்களுடனான மோதலின் போது நெடுந்தீவு கடற்பரப்பில் ஜூன் மாதம் ஒரு கடற்படை வீரரொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

