பாதாளக் கோஷ்டிகளை கைது செய்யும் சுற்றிவளைப்பில் பொலிஸாரால் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.
வெலிகம ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேக நபர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
துரதிர்ஷ்டவசமாக, இரவுச் சுற்றில் மற்றொரு பொலிஸ் குழு, கொழும்பு குற்றத் தடுப்பு அதிகாரிகளை குற்றவாளிகள் என்று தவறாகக் கருதி, ஹோட்டலுக்கு அருகே அவர்களது வெள்ளை வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது என்றார்.
சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை நடந்து வருகிறது.
மேலும் கொழும்பு குற்றத் தடுப்பு அதிகாரியின் மரணம் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் விளைந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை, சந்தேக நபர்கள் அந்த பகுதி பொலிஸ் குழு வருவதற்கு முன்னர் வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

