விலை அதிகரிப்பை கருத்தில் கொண்டு வடக்கின் பல பகுதிகளில் எரிபொருளை பதுக்கி புதுவருடத்தை துன்பமாக்கியதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தினரை பொதுமக்கள் விமர்சித்துள்ளனர்.
இதனால் பெரும்பாலான மக்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாது வீதிகளில் வாகனங்களுடன் அந்தரிப்பதாக யெப்னா கலரி செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் உரிய தரப்புக்கள் மாவட்ட செயலகம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை போன்ற பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் என்ன செய்கிறார்கள் என பொதுமக்கள் கடிந்து கொண்டனர்.
புத்தாண்டு முதல் 18 வீதம் வற் வரி விதிக்கப்படுவதால் அனைத்து பொருட்களும் விலை அதிகரிப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

