மழையுடன் கூடிய வானிலை நாளை (14) முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

