அயோத்தி ஶ்ரீ இராமர் திருக்கோவில், திறப்பு விழாவை முன்னிட்டு இலங்கையில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
வரலாற்று சிறப்பு மிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் திங்கட்கிழமை (22) அபிசேக பூஜைகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணம் – துன்னாலை வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், பூஜை, பஜனை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது.
பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் அகில இலங்கை சிவசேனை ஏற்பாட்டில் இந்திய துணைத்தூதரக அதிகாரியின் தலைமையில் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. இந்த விசேட பூஜையில் உருத்திர சேனையினர், சிவ சேனையினர், திருலங்காபுரி ஆதீன முதல்வர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் பங்கேற்புடன் வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. 
இந்தியாவின் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா திங்கட்கிழமை (22) பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.
காணொளியாக பார்க்க…..
https://fb.watch/pKPfJLCdXF/?mibextid=RtaFA8
அயோத்தி இராமர் கோவில் திறப்பு விழா!

