காணொளியாக பார்க்க…..
https://fb.watch/pKPfJLCdXF/?mibextid=RtaFA8
அயோத்தி ஶ்ரீ இராமர் கோவில் திறப்பு விழா பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் வெகுவிமரிசையாக திங்கட்கிழமை (22) இடம்பெற்றது.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கத்தின்(RSS) தலைவர் மோகன் பகவத் , உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
சாது, சந்நியாசிகளின் மந்திர பாராயணத்துடன் பக்தர்களின் ராம மந்திர முழக்கம் வானைப் பிளக்க பிராண பிரதிஷ்டை விழா இடம்பெற்றது. இதன்போது ஹெலிகொப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
51 அங்குல உயரம் கொண்ட ராம் லல்லா எனப்படும் பால இராமரின் திருவுருவச் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து, அயோத்தியின் பிரதிஷ்டை விழா இடம்பெற்றது.
ஶ்ரீபால இராமர் சிலையின் மீது வருடாந்தம் ராம நவமியன்று சூரிய ஔி விழுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவ கவுடா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், நடிகர்களான ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி ஜெக்கி ஷெரோஃப், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றிருந்தனர்.
ஶ்ரீ இராமர் பக்தி சங்கீர்த்தனத்தில் பாடகர்களான சங்கர் மகாதேவன், சோனு நிகம் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா – இலங்கையிலும் விசேட வழிபாடுகள்!
அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா – இலங்கையிலும் விசேட வழிபாடுகள்!

