30.6 C
Colombo
Saturday, October 10, 2026

வடகிழக்கு மாகாணங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் .

வடகிழக்கு மாகாணங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் இருப்பதாக யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.

தற்போதைய காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று(1) யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 27 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தற்பொழுது சிலாபத்திற்கு 67 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

அத்தோடு குறித்த தாழமுக்கமானது தற்போது சிலாபத்திற்கு மேற்காக நிலை கொண்டிருப்பதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களுக்கும் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மழை கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படும் என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles