32.2 C
Colombo
Friday, October 9, 2026

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய 702 இலங்கையர்களிடம் விசாரணை!


இந்தியாவை கேந்திரமாகக் கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 702 இலங்கையர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆர்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கொழும்பு மேலதிக நீதவானிடம் இன்று(1) இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்திய அரச புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட மொஹமட் சம்சுதீன் என அழைக்கப்படும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நீண்டகால உறுப்பினரின் வட்ஸ்அப் கணக்கை சோதனைக்கு உட்படுத்திய போதே, குறித்த இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளது.

கடும்போக்குவாதியான சஹ்ரான் ஹாசிம் நடத்திய போதனைகளின் குரல் பதிவுகள் மற்றும் நிழற்படங்கள் என்பன குறித்த வட்ஸ்அப் கணக்கில் அடங்கியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

சந்தேகநபர்கள் 702 பேரில் ஒருவரான மொஹமட் தவ்சான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அவரின் பங்களிப்பு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles