தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு இசை நிகழ்ச்சியின் போது கிட்டார் கண்ணில் தாக்கியதாக அவர் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், அது பாரதூரமானதல்ல என்றும் எதிர்கால இசை நிகழ்ச்சிகளில் தான் பங்கேற்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

