27.8 C
Colombo
Friday, August 21, 2026

ஜப்பான் நாட்டின் மூன்று போர் கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன!

ஜப்பான் தற்பாதுகாப்பு சமுத்திர படையணிக்கு சொந்தமான மூன்று போர் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

MURASAME, KAGA மற்றும் FUYUZUKI ஆகிய மூன்று பாரிய போர் கப்பல்களே இலங்கை வந்தடைந்துள்ளன.

220 கப்பல் பணியாளர்களுடன் வருகை தந்துள்ள 151 மீட்டர் நீளம் கொண்ட FUYUZUKI கப்பல் நாளை (03) நாட்டில் இருந்து புறப்படவுள்ளது.

மற்றைய இரு கப்பல்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளன.

கப்பல்களின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பம் என ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles