பிரான்ஸின் புதிய பிரதமராக 34 வயதான கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் வரலாற்றில் மிகவும் வயது குறைந்த பிரதமராக இவர் பதிவாகியுள்ளார்.
கடந்த 20 மாதங்களாக பிரதமராக பதவி வகித்த எலிசபெத் போர்ன் இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனால் இவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை கல்வியமைச்சராக பதவி வகித்தவரை பிரதமராக நியமித்தமை அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல்கள் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், பிரான்ஸ் அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பு கேப்ரியலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தைக் கொண்டு தமது ஜனாதிபதி பதவியை மீளாய்வு செய்வதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இலக்கு வகுத்துள்ள நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

