28.9 C
Colombo
Friday, August 21, 2026

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைப் குறைக்கவுள்ள அவுஸ்ரேலியா!

அவுஸ்ரேலியா இன்னும் 2 ஆண்டுகளில் புதிதாக நாட்டுக்குள் வரும் குடியேறிகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கத் திட்டமிடுகிறது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் ஆண்டுக்கு 250,000 குடியேறிகள் மட்டுமே அவுஸ்ரேலியாவுக்குள் அனுமதிக்கப்படலாம். இப்போது ஆண்டுக்குச் சுமார் 510,000 குடியேறிகள் செல்கின்றனர்

இதனால் குடியேறிகள் எண்ணிக்கை என்றும் இல்லாத அளவுக்குப் பதிவாகியுள்ளது. இதனால் வீடுகள் உள்ளிட்ட இதர வசதிகளில் பற்றாக்குறை ஏற்பட்டு உள்நாட்டில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

ஆயினும் திறன்பெற்ற ஊழியர்களின் எண்ணிக்கையில் இன்னும் பற்றாக்குறை நீடிக்கிறது. அவர்களைக் கவர்ந்திழுப்பதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கடும் சவாலை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவிக்கின்றன.

அனைத்துலக மாணவர்களுக்கும் குறைந்த திறனுடைய ஊழியர்களுக்குமான விசா விதிமுறைகளை அவுஸ்ரேலியா கடுமையாக்கவிருக்கிறது.

1)அனைத்துலக மாணவர்களுக்கான ஆங்கில மொழி புலமையின் தரத்தை உயர்த்துவது

2) விசாவுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு விதிமுறைகளைக் கடுமையாக்குவது

3)படிப்பை முடித்து மேற்கல்விக்காக இரண்டாவது விசாவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அது உண்மையிலேயே கல்விமேம்பாட்டுக்கோ அல்லது வேலைக்கோ உதவும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அவுஸ்ரேலியாவில் தற்போது 650,000 வெளிநாட்டு மாணவர்கள் இருக்கின்றனர். அவர்களில் நிறையப் பேர் இரண்டாவது விசாவில் இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் காட்டுகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles